மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 April 2021 11:41 PM IST (Updated: 12 April 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி கரூர் மணவாடியை சேர்ந்த 36 வயது பெண், ஆலம்பாளையத்தை சேர்ந்த 37 வயது ஆண், அருகம்பாளையத்தை  சேர்ந்த 26 வயது ஆண், உன்ன சத்திரத்தை சேர்ந்த 19 வய வாலிபர், கோடங்கிபட்டி சேர்ந்த 48 வயது பெண், 28 வயது ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 52 வயது ஆண், வெங்கமேடு சேர்ந்த 34 வயதுஆண், அரவக்குறிச்சி சேர்ந்த 61 வயது ஆண், வேடிச்சிபாளையத்தை சேர்ந்த 24 வயது ஆண் உள்பட 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story