புளியமரத்தில் தீ


புளியமரத்தில் தீ
x
தினத்தந்தி 12 April 2021 11:42 PM IST (Updated: 12 April 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

புளிய மரத்தில் நேற்று திடீரென்று தீ்ப்பற்றி எரிந்தது.

அன்னவாசல், ஏப்.13-
அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி கிழக்குதெரு பகுதியில் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று திடீரென்று தீ்ப்பற்றி எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலையஅலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். யாரோ மர்மநபர்கள் புகைப்பிடித்து விட்டு, அந்த தீயை அணைக்காமல் மரப்பொந்தில் போட்டுவிட்டு சென்றதால் தீப்பிடித்தது தெரியவந்தது.

Next Story