வாணியம்பாடி அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு


வாணியம்பாடி அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
x
தினத்தந்தி 12 April 2021 11:45 PM IST (Updated: 12 April 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

வாணியம்பாடி
ஆம்பூரை அடுத்த பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதிலி (வயது 35). இவர் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மதியம் 2 மணியளவில் பனங்காட்டூருக்கு மொபட்டில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் சம்பந்திகுப்பம் என்ற இடத்தில் அவரை வழிமறித்து மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

 இது குறித்து அவர் வாணியம்பாடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் செயினை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story