‘இரவு நேர நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்’- நாட்டுப்புற இசை கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

‘இரவு நேர நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்’-  நாட்டுப்புற இசை கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 April 2021 11:59 PM IST (Updated: 12 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழா காலம் என்பதால் இரவு நேர நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று நாட்டுப்புற இசை கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

கோவில் திருவிழா காலம் என்பதால் இரவு நேர நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று நாட்டுப்புற இசை கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

காளி வேடம் அணிந்து...
சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்க தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் அனைத்து நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் நூதன முறையில் காளி வேடமணிந்தும் தவில், நாதஸ்வரம் இசைத்து ஆட்டம் ஆடிவந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
பங்குனி, சித்திரை மாதங்களில் கிராமப்புற கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களை நம்பி தான் மேடை நாடகங்கள், நாதஸ்வர, தவில் கலைஞர்கள், மைக்செட் அமைப்பவர்கள் என ஏராளமான கலைஞர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அனுமதிக்க வேண்டும்

 இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு தற்சமயம் திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் அதனை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை நடத்தும் கலைஞர்கள் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே இரவு நேர நிகழ்ச்சிகள் நடத்த விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டும்.
தற்போது அரசு அறிவித்திருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

Next Story