கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக அனைவரும் முககவசம் அணிய போலீசார் வேண்டுகோள்
கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக அனைவரும் முககவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
கரூர்
விழிப்புணர்வு கூட்டம்
கரூரில் நேற்று நகர போக்குவரத்து போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்கதலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பணி புரியும் இடங்களில் மற்றும் அனைத்து இடங்களிலம் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முதலில் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்வதன் மூலம் நோய் தொற்றின் தாக்கத்தை குறைக்க முடியும்.
அதற்கு வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் கைககளை கழுவிய பிறகு, முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். அதன்பிறகு தான் கடைகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.
அபராதம் விதிக்கப்படும்
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வப்போது அவர்களுக்கு கபசுர குடிநீரை வழங்க வேண்டும்.
மேலும் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் வாகனம் ஓட்டி செல்லும்போது செல்போன் பேச கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், ஓட்டல்கள், பஸ்பாடிகள், டெக்ஸ்டைல்கள், லாரிகள், துணிக்கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story