வெயில் தாக்கம் அதிகரிப்பு: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


வெயில் தாக்கம் அதிகரிப்பு:  பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 13 April 2021 12:17 AM IST (Updated: 13 April 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெயில் தாக்கம் அதிகரிப்பால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

விக்கிரமசிங்கபுரம்:
வெயில் தாக்கம் அதிகரிப்பால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

நீர்வரத்து குறைந்தது

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த அணையின் நீரின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். 

இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் அதிக அளவில் அடித்து வருகிறது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

நீர்மட்டம் 

பாபநாசம் அணை நீர்மட்டம் 105.45 அடியாக உள்ளது. வினாடிக்கு 14.93 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 104.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது.

Next Story