முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 April 2021 12:30 AM IST (Updated: 13 April 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அம்பை:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வீரவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.72 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பெத்ராஜ், சுகாதார ஆய்வாளர் பிரபாகர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

களக்காடு கோவில்பத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவி, முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதுபோல களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவின் படி, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினர். மேலும் தெருக்களில் கிருமிநாசினி தெளித்தனர்.

இதேபோல் திசையன்விளை போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  திசையன்விளை டாஸ்மார்க் கடை அருகில் முககவசம் அணியாமல் சென்ற 46 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். உவரி போலீசார் குட்டம், காரி கோயில் விலக்கு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த 79 பேருக்கு அபராதம் விதித்தனர்.

சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ் மற்றும் போலீசார் சீவலப்பேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

Next Story