வள்ளியூர் உரக்கிடங்கில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி ஆய்வு


வள்ளியூர் உரக்கிடங்கில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி ஆய்வு
x
தினத்தந்தி 13 April 2021 12:41 AM IST (Updated: 13 April 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார்.

வள்ளியூர்:

தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையாளர் நீதிபதி ஜோதிமணி வள்ளியூர் நகர பஞ்சாயத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் வளம் மீட்பு பூங்காவான உரக்கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதை பார்வையிட்டார்.

நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் ஜெகதீசுவரி, உதவி செயற்பொறியாளர்கள் முகமது ஷெரீப், வாசுதேவன், செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story