புளியரை, பாவூர்சத்திரம் பகுதிகளில் கொரோனா சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ் ஆய்வு


புளியரை, பாவூர்சத்திரம் பகுதிகளில்  கொரோனா சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ் ஆய்வு
x
தினத்தந்தி 13 April 2021 12:47 AM IST (Updated: 13 April 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

புளியரை, பாவூர்சத்திரம் பகுதிகளில் கொரோனா சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ் ஆய்வு செய்தார்.

செங்கோட்டை:
புளியரை, பாவூர்சத்திரம் பகுதிகளில் கொரோனா சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ் ஆய்வு செய்தார்.

சிறப்பு அதிகாரி ஆய்வு

செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரள எல்லை பகுதியில் இருக்கும் கொரோனா தடுப்பு மருத்துவ சோதனை சாவடி முகாமில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் கொரோனா சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்பு அங்கு உள்ள சுகாதார அதிகாரிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், துணை சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, உதவி கலெக்டர் ராமச்சந்திரன், செங்கோட்டை தாசில்தார் ரோசன்பேகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பாவூர்சத்திரம்

இதேபோல் அவர்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் போடும் பணி, தடுப்பு நடவடிக்கைகளையும், பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். 

மேலும் அத்தியூத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பராமரிப்பு முகாமையும், மாவட்ட கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி அனுஜார்ஜ், கலெக்டர் சமீரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அவர்களுடன் தென்காசி தாசில்தார் சுப்பையன், திட்ட இயக்குனர் சரவணன், சுகாதார துணை இயக்குனர் வரதராஜன், நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் கீர்த்திகா, கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் ஹோம்நாத், டாக்டர் ஐஸ்வர்யா, கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் சோபியா, வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, பூலாங்குளம் ஊராட்சி செயலர் காந்தி லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story