தில்லை காளியம்மன் திருநடன வீதி உலா
ஜெயங்கொண்டத்தில் தில்லை காளியம்மன் திருநடன வீதி உலா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் தில்லை காளியம்மன் கருவறையில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தில்லை காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது. இதில் காப்பு கட்டி ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்மனின் அனுமதி பெற்ற நபர் அம்மன் வேடத்தில் நடனமாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, வீடுதோறும் சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதைத்தொடர்ந்து அம்மன் கோவிலுக்கு சென்றதையடுத்து, அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று முடிவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story