கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி


கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 April 2021 1:39 AM IST (Updated: 13 April 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆண்டிமடம்:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை சார்பாக ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார மருத்துவமனை சார்பாக ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில் நேற்று ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் 3 வாகனங்களில் குழுவினர் தனித்தனியாக கவரப்பாளையம், திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, விளந்தை தெற்கு, வரதராஜன்பேட்டை, அணிக்குதிச்சான், இடையக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு சென்று, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். தடுப்பூசி போடும் பணியில் டாக்டர்கள் கண்ணன், ஆனந்தி, சந்தியா, ராஜலட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல் ஒவ்வொரு நாளும் அனைத்து ஊர்களுக்கும் சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும், என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

Next Story