போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 April 2021 1:40 AM IST (Updated: 13 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை:

நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி என்ற அஜித் (வயது 22). லோடு ஆட்டோ டிரைவர். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சாத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அஜித் தனது காதலியுடன் சென்றார். அப்போது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்தை கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் 2 பேரையும் கைது செய்தனர். சிறுமியை மீட்டு நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

Next Story