மண்ணச்சநல்லூர் அருகே தீப்பற்றி எரிந்த மரம்
மண்ணச்சநல்லூர் அருகே மரம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பெருவளைவாய்க்கால் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரு தூங்குமூஞ்சிமரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் மரத்தின் அடிப்பகுதி மற்றும் கிளை எரிந்து நாசமானது. அவ்வழியே சென்றவர்கள் சிகரெட் பிடித்து விட்டு காய்ந்த சருகுகள் மீது போட்டு விட்டுசென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story