முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்
காரியாபட்டியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
காரியாபட்டி,
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் தான் வருகின்றனர். இதையடுத்து காரியாபட்டி தாசில்தார் சந்திரசேகரன், மண்டல துணை தாசில்தார் பால்ராஜ் ஆகிேயார் தலைமையில் வருவாய்த்துறையினர் காரியாபட்டி நகருக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 30 ேபருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
ஆட்டோ ஓட்டுனர்கள், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள், நடை பாதை வியாபாரிகள் ஆகியோரிடம் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story