காயமடைந்த மான் சாவு


காயமடைந்த மான் சாவு
x
தினத்தந்தி 12 April 2021 9:00 PM (Updated: 12 April 2021 9:00 PM)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே காயமடைந்த மான் இறந்தது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே தூத்துக்குடி நான்கு வழிச்சாலை வாழ் வாங்கி விலக்கு பகுதியில் மான் ஒன்று காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடப்பதாக வத்திராயிருப்பு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில் வன பாதுகாப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து சாலையோரம் கிடந்த மானை மீட்டு சுக்கிலநத்தம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து  சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது. கால்நடை மருத்துவர் சத்தியபிரபா முன்னிலையில் உடற்கூறு செய்யப்பட்டு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story