வால்பாறையில் பலத்த மழை
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வால்பாறை
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் வெயில்
மலைப்பிரதேசமான வால்பாறையில் கடும் வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்தது. மேலும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டதுடன் 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டமும் குறைந்து 1 அடியானது.
மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். எனவே வெயில் பாதிப்பில் இருந்து தப்பிக்க மழை பெய்யாதா என்று காத்து இருந்தனர்.
பலத்த மழை
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வால்பாறையில் மேக மூட்டமாக இருந்ததுடன், அவ்வப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு திடீரென்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆண்டுதோறும் இதே நேரத்தில் கோடை மழை அதிகமாக பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டில் அதுபோன்று மழை பெய்யவில்லை. தற்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம் என்றனர்.
Related Tags :
Next Story