மாவட்டத்தில் பரவலாக மழை: காமனேரியில் மின்னல் தாக்கி பசு செத்தது எடப்பாடியில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேச்சேரி அருகே மின்னல் தாக்கியதில் பசு செத்தது. எடப்பாடியில் மின்னல் தாக்கியதில் மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேச்சேரி அருகே மின்னல் தாக்கியதில் பசு செத்தது. எடப்பாடியில் மின்னல் தாக்கியதில் மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
பரவலாக மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
மேச்சேரி அருகே காமனேரி பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் அரை மணி நேரம் மழை பெய்தது. அப்போது காமனேரி காட்டுவளவு நரிகுண்டம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி வீட்டின் அருகில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் பசு செத்தது. அந்த பசுவின் மதிப்பு ரூ.45 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தென்னை மரத்தில் தீ
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்தது, எடப்பாடியை அடுத்த ஒட்டப்பட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தொப்பகவுண்டர் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
சிறிது நேரத்திற்கு பின்னர் தீ அணைந்து போனது. இதை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்தனர்.
தேவூர்
தேவூர் அருகே சென்றாயானூர், மயிலம்பட்டி, ஒடசக்கரை, பெரமாச்சிபாளையம், நல்லங்கியூர், கொட்டாயூர், கல்வடங்கம், செட்டிபட்டி, அம்மாபாளையம், சுண்ணாம்புகரட்டூர், சோழக்கவுண்டனூர், காவேரிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி கரும்பு, பருத்தி, எள், சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்துள்ளனர்.
தேவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் பயிர் வகைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வாடியது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story