முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்
முயலை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் முயல் வேட்டை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வேட்டையாடுபவர்களை பிடிக்க வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் பாலவநத்தம் பகுதியில் முயலை வேட்டையாடிய அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (வயது 37), பாண்டியராஜ் (24) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு மாவட்ட வன அதிகாரி ஆனந்த் உத்தரவின்பேரில் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story