வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு: சேலத்துக்குள் 400 கடத்தல்காரர்கள் புகுந்தார்களா? பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு: சேலத்துக்குள் 400 கடத்தல்காரர்கள் புகுந்தார்களா? பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 April 2021 2:57 AM IST (Updated: 13 April 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்துக்குள் 400 கடத்தல்காரர்கள் புகுந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று பொய்யான தகவல் பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்:

வைரலாகும் வீடியோ
வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவரை பொதுமக்கள் தாக்குவது போன்ற வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் பேசும் ஒருவர், சேலத்துக்குள் வெளிநாட்டை சேர்ந்த 400 பேர் இறங்கி உள்ளனர். இவர்கள் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை கடத்துவதற்காக சேலத்துக்கு வந்துள்ளனர். இதில் பெண் வேடமிட்டு வந்த ஒருவன், சிறுமியை கடத்தி செல்லும் போது ஊர் பொதுமக்களால் பிடிப்பட்டான்.
அவனிடம் விசாரிக்கும் போது, நாங்கள் 400 பேர் இறங்கி உள்ளோம். என்னை பிடித்துவிடலாம், ஆனால் மற்றவர்களை பிடிக்க முடியாது. எனவே உங்களது குழந்தைகளை தனியாக கடைக்கு உள்ளிட்டவற்றுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் அந்த நபர் கூறி உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து உயர் போலீசார் கூறும் போது, இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொய்யாக பதிவான காட்சி. வாட்ஸ் அப்பில் பதிவானது குடிகாரன் ஒருவனிடம் இருந்து சிறுமியை மீட்கும் காட்சியாகும். இதை தவறாக சித்தரித்து தேவையில்லாமல் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
சேலத்துக்கு கடத்தல்காரர்கள் யாரும் வரவில்லை. ஆகையால் பொதுமக்கள் இந்த வீடியோவை நம்ப வேண்டாம். அச்சமடையவும் தேவையில்லை. இதுபோன்று பொய்யான வீடியோ பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story