ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்


ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 4:07 AM IST (Updated: 13 April 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்
சாக்கடை கால்வாய்
ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் வீதியில் சென்றது. இதனால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீதியில் ஓடுகிறது. மேலும் இங்குள்ள ரேஷன் கடை முன்பும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொருட்கள் வாங்க மிகவும் சிரமமாக உள்ளது.
சுத்தம் செய்ய வேண்டும்
கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பை உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், 'இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்' என்றனர்.
அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story