கொண்டித்தோப்பு பகுதியில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 தெருக்களுக்கு ‘சீல்’


கொண்டித்தோப்பு பகுதியில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 தெருக்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 April 2021 7:13 AM IST (Updated: 13 April 2021 7:13 AM IST)
t-max-icont-min-icon

கொண்டித்தோப்பு பகுதியில் 4 தெருக்களில் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பெரம்பூர், 

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் ரத்தினம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் நம்மாழ்வார் தெருவில் 8 பேர், கொண்டல் தெருவில் 8 பேர், கிருஷ்ணப்பா குளம் தெருவில் 6 பேர் என ஒரே பகுதியில் உள்ள 4 தெருக்களில் மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து அந்த 4 தெருக்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மண்டல சுகாதாரத்துறை அலுவலர் மாப்பிள்ளை துரை மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அந்த 4 தெருக்களிலும் இரும்பு வேலியால் அடைத்து ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த தெருக்கள் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், பொதுமக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்களும் வைத்துள்ளனர்.

முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை நன்றாக கழுவவேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story