கோவில் விழாவில் போலீஸ்காரரின் தாயிடம் சங்கிலி பறிப்பு


கோவில் விழாவில் போலீஸ்காரரின் தாயிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 9:54 AM IST (Updated: 13 April 2021 9:54 AM IST)
t-max-icont-min-icon

கோவில் விழாவில் போலீஸ்காரரின் தாயாரிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோட்டில் பழமைவாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி விழா இந்த கோவிலில் நேற்று நடந்தது.

அப்போது திரளான பக்தர்கள் விழாவை காண கோவிலுக்கு திரண்டனர். அவர்களில் திருத்தணி காந்தி ரோட்டை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில் என்பவரின் தாயார் சாந்தா என்பவர் பக்தர்கள் இடையே கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story