கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 13 April 2021 11:49 AM IST (Updated: 13 April 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. முதல் அலையைவிட தற்போது அசுர வேகத்தில் பரவும் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன் வக்கோலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தாகடேவுக்கு (வயது 52) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 3-ந் தேதி பி.கே.சி.யில் உள்ள ஜம்போ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் 2-வது கொரோனா அலைக்கு போலீஸ் துறையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

வைரஸ் நோய்க்கு உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு வக்கோலா போலீஸ் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள், இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story