தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்
கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம், இரு வேளை கிருமி நாசினி தெளிப்பு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படி ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றாநோய்
பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வீடு வீடாக சென்று...
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள்
மூலமாக வீடு வீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவ்வாறு ஆய்வு பணிகள்
மேற்கொள்ளும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் கூடும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூகஇடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போதும் முககவசம் அணிந்து கொள்ள
வேண்டும். பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் இருந்து
வீட்டுக்குள் சென்ற உடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொது கழிப்பறைகளை
சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி
வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், உணவுக் கூடங்கள்
மார்க்கெட் போன்றவற்றின் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி போட ஏற்பாடு
செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள்தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்ட்ம முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story