மண்குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்
மண்குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்
அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். அந்த சமயத்தில் கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். அப்போது அவினாசி அருகே ராயம்பாளையத்திலிருந்து கிராம மக்கள், அவினாசிமங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை சுமந்து 6 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டு செல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் ராயம் பாளையம் கிராம மக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக களிமண்ணால் உருவாக்கி வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்ட 3 குதிரைகளை 3 வேனில் எடுத்துச்சென்று ஆகாசராயர் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story