மூலனூர் அருகே பகவான் கோவில் திருவிழா ரத்து


மூலனூர் அருகே  பகவான் கோவில் திருவிழா ரத்து
x
தினத்தந்தி 13 April 2021 6:37 PM IST (Updated: 13 April 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே பகவான் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் கோவிலுக்கு வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மூலனூர்
மூலனூர் அருகே பகவான் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் கோவிலுக்கு வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பகவான் கோவில்
மூலனூர் அருகே  பிரசித்தி பெற்ற பகவான் கோவில், டி.குமாரபாளையத்தில் சின்ன பகவான் கோவில், மணலூரில் செல்லாண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கோவில் திருவிழா கோலம் கொண்டு இருக்கும்.
திருவிழாவில் கலந்து கொள்ள மூலனூர் சுற்றுவட்டார பகுதியில் மட்டுமின்றி பழனி ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மதுரை பகுதிகளில் இருந்தும்,  ஆந்திரா கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அவர்கள் கோவில் பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து திருவிழா முடியும் வரை தங்கியிருந்து பகவானை வழிபட்டு செல்வது வழக்கம். 
திருவிழா ரத்து
இந்த ஆண்டு நடைபெற இருந்த யுகாதி திருவிழா கொரோனா பாதிப்பின் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம்  ரத்து செய்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் இந்த மூன்று நாட்களுக்கு அந்த கோவிலில் வியாபாரம் செய்ய வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் மூலனூர் அருகே உள்ள மணலூர் செல்லாண்டியம்மன் கோவிலில் யுகாதி திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த திருவிழாவின்போது பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபடுவது வழக்கம்.
கொரானா தாக்கத்தின் காரணமாக தீர்த்தத்திற்கு செல்லும் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோன்று 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள் மேலும் சர்க்கரை நோயாளிகள் இதய நோயாளிகள் போன்றவர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இந்த இரண்டு கோவில்களிலும் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் கோவிலுக்கு வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.
-------------


Next Story