6 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


6 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 April 2021 6:53 PM IST (Updated: 13 April 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அரசு மருத்துவமனையில் இதுவரை 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனையில் இதுவரை  6 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுவேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம். வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும் என்று அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அத்துடன் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து பொதுமக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சிலர் தங்களது நண்பர்களை சந்திக்கும்போது நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என்று கேட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்டபின்பு எப்படி உள்ளது என்று கேட்டுவிட்டு தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். அதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 அரசு மருத்துவமனை
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு அங்கு கடந்த ஜனவரி மாதம் 16ந்தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டு கொள்கிறவரின் பெயர் விவரம் பதிவு செய்யப்பட்ட பின்பு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டதும் அவர்கள் 10 நிமிடம் ஓய்வு எடுக்க அருகில் உள்ள தனி வார்டில் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை வரை 5 ஆயிரத்து 999  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

Next Story