நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் சாராய வியாபாரி கைது


நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 13 April 2021 1:46 PM GMT (Updated: 13 April 2021 1:46 PM GMT)

நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

நாகூர், 

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பெயரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் அறிவுறுத்தல்படியும், சாராய கடத்தலை மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிைலயில் கொட்டாரங்குடியில் நேற்று நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல்

விசாரணையில் அவர் கொட்டாரங்குடி சின்னகன்னாமங்களம் ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த சாராய வியாபாரி சங்கர் (வயது 43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக 110 லிட்டர் சாராய பாக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்ெகட்டை பறிமுதல் செய்தனர். மேலும் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story