தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிப்பு
தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிப்பு.
வாய்மேடு,
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொேரானா பரவலை தடுக்கும் வகையில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள தலைஞாயிறு, அக்ரஹாரம், கடைவீதி, சின்னக்கடை தெரு, வேன் மார்க்கெட், ஆட்டோ நிறுத்தம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வணிகர்களுக்கு பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த பணியில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், எழுத்தர் குமார், ஊழியர்கள் கொளஞ்சி ராஜன், அன்பு, மணிவண்ணன், ஜெயச்சந்திரன், முருகானந்தம் ஆகியோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story