நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு


நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 April 2021 7:28 PM IST (Updated: 13 April 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு ரூ.4 கோடியே 10 லட்சம் வசூல்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்து காப்பீடு, குடும்ப நல வழக்கு, சிவில் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 727 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 116 வசூல் செய்யப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தமிழரசி, பன்னீர்செல்வம், சார்பு நீதிபதி ஜெகதீசன், குற்றவியல் நீதிபதிகள் சீனிவாசன், சுரேஷ் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Next Story