தென்திருப்பேரை அருகே தொழிலாளி தற்கொலை


தென்திருப்பேரை அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2021 7:39 PM IST (Updated: 13 April 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே உள்ள மணல்மேடு வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராமகிருஷ்ணன்(வயது 65). இவருக்கு சித்திரை (60) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவி  கூலி வேலைக்கு சென்று வருகிறார். ராமகிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. அதனால் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். சம்பவத்தன்று மாலையில் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மதுவில் கரையான் மருந்தை கலந்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது மூத்த மகள் இசக்கி தங்கம் 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்திருநகரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story