சக்தி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா


சக்தி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 13 April 2021 2:35 PM GMT (Updated: 13 April 2021 2:37 PM GMT)

கூடலூரில் சக்தி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

கூடலூர்,

கூடலூர் செவிடிப்பேட்டை சக்தி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 7 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், 8 மணிக்கு உஷ பூஜையும் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு மிருத்யஞ்ச ஹோமம் நடத்தப்பட்டது. 
மதியம் 12 மணிக்கு உச்சிகால மகா தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுதர்சன ஹோமமும் நடைபெற்றது. 

11-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், காலை 7 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜையும், தொடர்ந்து பிம்பசுத்தி கலச பூஜை, கலசாபிஷேகமும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், தொடர்ந்து இரவு 9 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

சுதர்சன ஹோமம்

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை மற்றும் தில ஹோமம் நடைபெற்றது. அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், மதியம் 12.30 மணிக்கு சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உஷ மற்றும் கலச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணபதி மற்றும் சுதர்சன ஹோமம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்மன் கலசாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம்

பின்னர் 11.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தபட்டு உள்ளதால், பக்தர்கள் இன்றி எளிமையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர் மதியம் 12 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story