சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்


சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
x
தினத்தந்தி 13 April 2021 8:10 PM IST (Updated: 13 April 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடைகாலத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு வகை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. குறிப்பாக சங்ககால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கொன்றை மலர்கள் கூடலூர், முதுமலை பகுதியில் சாலையோரங்களில் அதிகளவில் பூத்து காணப்படுகிறது. 

இன்று(புதன்கிழமை) கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ பண்டிகையையொட்டி நடைபெறும் இறை வழிபாட்டில் கொன்றை மலர்கள் தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. தற்போது முதுமலையில் கடும் வறட்சி நிலவுகிறது. 

இதனால் அனைத்து வகையான மரங்களும், தாவரங்களும் பசுமை இழந்து காணப்படுகிறது. இருப்பினும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கொன்றை மரங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ரசித்து செல்கின்றனர்.

Next Story