சிலைகளை சேதப்படுத்திய போதை ஆசாமி கைது
சிலைகளை சேதப்படுத்திய போதை ஆசாமி கைது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே எருமாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடையை நேற்று முன்தினம் இரவில் அர்ச்சகர் பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் மீண்டும் கோவில் நடையை திறக்க வந்தார்.
அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. மேலும் சாமி சிலைகள், புகைப்படங்கள், விளக்குகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் காலி மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து எருமாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திருமங்கலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 49) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர் மீது திருட்டு முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story