ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்


ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்
x
தினத்தந்தி 13 April 2021 9:08 PM IST (Updated: 13 April 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.


திண்டுக்கல்

திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், என்.சி.சி. சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கமாண்டிங் அதிகாரி சந்தீப்மேனன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாத்திமாபேகம் ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பாக பேசினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தொடர்பாக என்.சி.சி. மாணவர்களுக்கு குறும்படம் காண்பிக்கப்பட்டது. 
அதேபோல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். முன்னதாக திண்டுக்கல் நகரில் 4 பகுதிகளில் இருந்து என்.சி.சி. மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
இதில் என்.சி.சி. அதிகாரிகள் பாண்டீஸ்வரன், ஞானஜெயராஜ், முத்து, ராவ் உள்பட 80 மாணவர்கள் பங்கேற்றனர். 

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசிய பேரவை சார்பில் திண்டுக்கல்லில் காமராஜர் சிலை அருகில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதற்கு மாநகர தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அப்போது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பேரவை நிறுவனர் வைரவேல், நிர்வாகிகள் கோபிநாத், ராதாகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story