பழனி அருகே ஒரே கிராமத்தில் 8 பேருக்கு கொரோனா


பழனி அருகே ஒரே கிராமத்தில் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 April 2021 9:35 PM IST (Updated: 13 April 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே ஒரே கிராமத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கீரனூர்:
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பேருக்கும் என ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
கொரோனா பரவல் காரணமாக அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுருளியாண்டி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதி மூடப்பட்டது. 

Next Story