கோவையில் ஒரே நாளில் 504 பேருக்கு கொரோனா
கோவையில் ஒரே நாளில் 504 பேருக்கு கொரோனா.
கோவை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று பட்டியல் வெளியிட்டது. அதில், கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 369 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 59 ஆயிரத்து 99 பேர் பூரண குணமடைந்து உள்ளனர். தற்போது 4,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனா தொற்றுக்கு உயிர்பலி எதுவும் இல்லை. இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story