சாணார்பட்டி அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது
சாணார்பட்டி அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 42). விவசாயி. இவரது வீட்டில் அனுமதியின்றி முறைகேடாக மின் இணைப்பு இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜெயபாலுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் அபராதம் விதிக்கப்பட்டதற்கு, அதே ஊரை சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரெங்கசாமி (58) என்பவர் தான் காரணம் என எண்ணிய ெஜயபால், அவரிடம் தகராறு செய்தார். மேலும் ரெங்கசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயபாலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story