சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 10:06 PM IST (Updated: 13 April 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் நடந்த 2 பேர் கொலையை கண்டித்து சிவகங்கையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் 2 பேர் படுகொலை செய்ததை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் வீரையா தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் தென்னரசு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணியம்மா, அகில இந்திய வக்கீல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பூபதி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வடிவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தின் பொறுப்பாளர் வக்கீல் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story