புளிய மரத்தில் கார் மோதி ஒருவர் பலி 2 பேர் படுகாயம்
புளிய மரத்தில் கார் மோதி ஒருவர் பலி 2 பேர் படுகாயம்
அன்னூர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது28). இவரது உறவினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் உறவினரை பார்ப்பதற்காக தனது காரை எடுத்துக்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (30), வேலுச்சாமி (29) ஆகியோருடன் காரில் கோவைக்கு வந்தார்.
உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் சத்திக்கு செல்ல புறப்பட்டனர். கோவை கணேசபுரம் சங்கீத் மில் அருகே சென்ற போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரை ஓட்டி வந்த கருப்பசாமி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கருப்பசாமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மகேந்திரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து அன்னூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story