பெண்ணை பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு


பெண்ணை பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 April 2021 11:13 PM IST (Updated: 13 April 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினம், ஏப்.14-
மீமிசல் அருகே உள்ள ஏம்பக் கோட்டையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி பர்ஷினா பேகம் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல்லாஹ் என்ற ரதீஷ்கான். இவர் தற்போது புருணை நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாகுல் ஹமீதுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் அப்துல்லாஹ் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12-ந்் தேதி வரை பர்ஷினா பேகம் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து பர்ஷினா பேகம் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் விசாரணை நடத்தி அப்துல்லாஹ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

Next Story