மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
போடியில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி :
தேனி மாவட்டம் போடி புதூர் சவுந்தரவேல் நகரை சேர்ந்த முருகன் மகன் வெற்றிவேல் (வயது 28).
இவர் போடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தனது நிறுவனத்துக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இதுகுறித்து போடி நகர் போலீசில் வெற்றிவேல் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் அவருடைய மோட்டார் சைக்கிளை வேறு ஒருவர் ஓட்டி செல்வதை பார்த்தார்.
உடனே வெற்றிவேல் தனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருடியவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சின்னவர் மகன் முத்துப்பாண்டி (39) என்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story