6 பேர் மீது வழக்கு


6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 April 2021 12:05 AM IST (Updated: 14 April 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்.புதூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.
தடையும் மீறி சிலர் மாடுகளை கொண்டு வந்து ஆர்.பாலக்குறிச்சி பெரிய கண்மாய் பகுதியில் நிறுத்தி உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய பொன்னன், ராமநாதன், கந்தசாமி, ஆனந்த குமார், சத்தியராஜ், குணா ஆகிய 6 பேர் மீது தடையை மீறி மாடுகளை அவிழ்த்ததாக உலகம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story