100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பட்டொளி வீசி பறக்கிறது.
புதுக்கோட்டை, ஏப்.14-
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பட்டொளி வீசி பறக்கிறது.
100 அடி உயர கம்பம்
ரெயில் நிலையங்களில் அடையாளமாக பிரமாண்ட தேசிய கொடி கம்பம் முக்கிய ரெயில்நிலையங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பிராமண்ட கொடி கம்பம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 100 அடி உயரத்தில் கம்பம் அமைக்கப்பட்டு, அதில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தேசிய கொடி பறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் மதுரை ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த காரைக்குடி ரெயில்வே அதிகாரிகள், புதுக்கோட்டை ரெயில் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன. இந்த தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டொளி வீசி பறக்கிறது
புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு இந்த தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது. ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் இதனை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த தேசிய கொடி கம்பம் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்விற்கு ரெயில் பயணிகள் சங்கத்தினரை அழைக்கவில்லை எனக்கூறி அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.

Related Tags :
Next Story