நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


நெல்லையில்  கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 12:44 AM IST (Updated: 14 April 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவர் தனது மகள், தாயுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்ற முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், தனது கணவரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

மனு கொடுத்தார் 

இதைத்தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது நகை, ரொக்கப்பணத்தை எனது குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர். எனது கணவர் அந்த பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து கார், பங்களா வாங்கி சொகுசாக வாழ்ந்தார். மேலும் என்னை தினமும் துன்புறுத்துவதுடன், எனது குடும்பத்தினரை அவதூறாக பேசி வருகிறார். 

இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எனது கணவரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story