மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 April 2021 7:40 PM GMT (Updated: 2021-04-14T01:10:20+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரத்து 406 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் 351 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 298 பேர் சிகிச்சைப்பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 33 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story