அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திடீர் சாவு


அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 April 2021 7:40 PM GMT (Updated: 2021-04-14T01:10:23+05:30)

பணியில் இருந்த அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திடீரென இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் தர்மலிங்கம்(வயது 50). இவர் நேற்று மதியம் மருத்துவமனையில் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்துவிட்டு தனது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே தர்மலிங்கம் இறந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் அவரது சொந்த ஊரான ஒகளூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்தபோது தர்மலிங்கம் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story