கடலூாில் அம்பேத்கர் பேனரை அகற்றக்கூறியதால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கடலூாில் அம்பேத்கர் பேனரை அகற்றக்கூறியதால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்,
அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அம்பேத்கர் உருவப்படம் இடம்பெற்றிருந்த சுமார் 30 அடி உயரம் கொண்ட பேனர் வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று இரவு விரைந்து சென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பேனரை உடனடியாக அகற்றும்படி கூறினர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்காத பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தாங்கள் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வைத்துள்ள பேனரை அகற்ற முடியாது என்று போலீசாரிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story