கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போலீசார்
கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிகளில் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், அது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர். பல்ேவறு இடங்களில் நடந்த இந்த பிரசாரத்தில் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story