இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 April 2021 1:11 AM IST (Updated: 14 April 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள மேல கிளாக்குளத்தை சேர்ந்த அமிர்த பாலன் மகன் செல்வின் (வயது 40). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஞானதாஸ் மகன் கார்த்திக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது செல்வின் உறவினர்கள் 4 பேர் கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக், செல்வின் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story